சிறிய முதலீட்டில் படங்கள் தயாரிக்க முன்வரும் நிறுவனம்!

தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் அல்லது மீடியம் பட்ஜெட் படங்கள்தான் அதிகம். தயாரிப்பில் பாதி பணம் ஹீரோவுக்கும் படத்திற்கான விளம்பரங்களுக்கும் போய்விடும்.

இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது எட்டாக்கனியாக இருந்துவருகிறது.

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது.

முதல் படியாக அறிமுக இயக்குநர் தினேஷ் தீனதயாளன் முதல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத் தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது.

அதில் காமெடி நடிகர் சதிஷ், நடிகர் சௌந்தரராஜன், தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி, நடிகர் மாரிமுத்து போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பா. மகிழ்மதி

You might also like