நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, மத்திய பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா, ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசமைப்பு திருத்த மசோதாக்களும் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.