அ.தி.மு.க பொதுக்குழுவில் இறுதியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி “புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் கொண்டு வந்த திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதத்தில் இருந்தன. அவற்றை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.
நீங்கள் நினைப்பதை நான் நிறைவேற்றுவேன். கடுமையாக உழைப்பேன். தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஏதோ விபத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது.
இந்த 14 மாத கால தி.மு.க ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது. கஞ்சா எல்லாப் பகுதியிலும் கிடைக்கிறது. போதைப் பொருள் மாநிலமாக மாறிவிட்டது தமிழகம்.
ஆன்-லைன் ரம்மி திட்டத்தைத் தடை செய்யச் சொன்னோம். செய்யவில்லை.
தி.மு.க ஆட்சி, குடும்ப ஆட்சி. ஸ்டாலின் குடும்பத்தில் பல முதல்வர்கள். அதிகாரிகள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். எதிலும் கரப்ஷன்.
ஓ.பி.எஸ்.ஸூடன் பல முறை நமது தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள். அவர் இசையவில்லை.
கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒற்றைத் தலைமை செயல்பட வேண்டும்.
ஓ.பி.எஸ் எதை விட்டுக் கொடுத்தார்? ஒன்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. அம்மா தேனியில் போட்டியிட்டபோது ஓ.பி.எஸ். யாருக்காகத் தேர்தல் வேலை பார்த்தார்.
48 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் விசுவாசமாகச் செயல்பட்டு வந்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.