44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.
உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. ஓபன் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 187 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் பிரிவில் 162 அணியினர் பதிவு செய்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தர வரிசையை சர்வதேச செஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2771 புள்ளிகளுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 2705 புள்ளிகளுடன் அசர்பெய் ஜான் 2-வது இடத்தில் இருக்கிறது.
போட்டியை நடத்தும் இந்தியா, 2696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. தரவரிசை ஆகும். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்திருந்தது.
தற்போது 3-வது இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 அணிகளில் 5 தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர்.