ஜூலை – 4, வேகானந்தர் நினைவு தினம்
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் தேவையா என்பது பற்றிய கேள்விக்கு விவேகானந்தர் அன்று அளித்த பதில் இதோ:
“இந்தியாவிற்கு சுதந்திரம் இப்பொழுது வேண்டாம். வெள்ளையனை வெளியேற்றிய பின் சுதந்திரத்தை கையாள பண்புள்ள மனிதர் தேவை. இந்தியாவில் பண்புள்ள மனிதர்களை உருவாக்க இன்றியமையாதது நற்கல்வி ஆகும்.
Man and Woman Making Value Education
இத்தகைய பண்புள்ள மனிதர்களால்தான் நமது இந்திய தேசத்தை வளமாக்க முடியும். நாட்டில் இருந்து வெள்ளையனை இன்று வெளியேற்றவும், பெற்ற சுதந்திரத்தை இனிதே கையாளும் பக்குவமும் இந்திய பாமர மக்களுக்கு இருக்காது.
இதை அறியாது இந்தியா சுதந்திரம் பெற்றால் இந்தியா குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல் ஆகிவிடும். வெள்ளையர்களிடம் நாம் சுதந்திரத்தை யாசகம் கேட்க வேண்டாம்!
இனிய பண்புள்ள கல்வியை இந்தியர்கள் பெற்றால் இந்திய சுதந்திரத்தை நாமே எடுத்துக்கொள்ள இனிய வழி பிறக்கும்.
இந்தக் கல்வியே மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் இந்திய பாமர மக்களை பண்புள்ளவர்களாக்கும் இந்தியாவிற்கு உடனே தேவை நற்கல்வியே!
இன்று சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாயிற்று இந்தியா என் நாடு; இந்தியர்கள் என் மக்கள் என இந்தியர்கள் எத்தனை பேர் சிந்திப்பார்கள்?
இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர் இன்று எத்தனை பேர்? சுவாமி விவேகானந்தர் இந்தியாவிற்கு சுதந்திரம் பற்றிக் கூறியதை இன்று அவரது நினைவு நாளில் எண்ணிப்பார்த்து இவரது தீர்க்கதரிசனத்தை கண்டு வியக்கிறேன்!
-நன்றி: முகநூல் பதிவு