நாட்டைக் கூறு போடுறான்…!

நினைவில் நிற்கும் திரை வரிகள்…!

“மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா- எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா- சில (மனு)
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா-இது
உல்லாச புரிதாண்டா… (மனு)
வசதியிருக்கிறவன் தரமாட்டான் – அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் (வசதி)
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்
இவன் சோறு போடுகிறான்
அவன் கூறு போடுறான்.”

– “கண் திறந்தது”- படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

You might also like