அன்னை மனமே என் கோயில்!

நினைவில் நிற்கும் வரிகள்:

*****

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

(உலகம்)

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

(உலகம்)

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

(உலகம்)

1962-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘பாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி, குரல்: டி.எம். சௌந்தரராஜன். இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா

You might also like