தவறான பொருளாதாரக் கொள்கையால் மக்கள் பாதிப்பு!

– ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மோடி அரசு நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ விசுவாசமாக இல்லை. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் சாமானிய மக்கள் மீது பணவீக்கத்தின் சுமையை ஏற்றி விட்டது. தற்போது அது தாங்க முடியாததாகி வருகிறது.

வரும் காலங்களில் பணவீக்கம் குறையும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான எண்ணத்தில் இருக்கிறீர்கள். வரும் நாட்களில் மோடி அரசாங்கத்தின் புதிய தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.

வீடு, வாகனம், தனிநபர் கடன்கள் மற்றும் இ.எம்.ஐ.கள் உயர்ந்துள்ளது, நான் மத்திய அரசை கேட்க விரும்புகிறேன், சம்பளம் வாங்கும் வகுப்பினர் தங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like