விக்ரம் படத்தில் பல இடங்களில் கத்தரி போட்ட சென்ஸார் போர்டு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட் குறித்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ‘GST’ என்ற வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் தகாத வார்த்தைகள் உட்பட பல விஷயங்கள் சென்சாரில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வந்த தகவல்படி முதல் ஹைலைட்டாக ஷாட் எண் 162 (ரீல் 2 – 44.35)-ல் இடம்பெற்ற ‘GST’ என்ற வார்த்தை நீக்கப்பட்டிருக்குது.

படத்தின் கதாநாயகன் நடுவிரலை காட்டும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி தொடர்ந்து ஒருவரைத் தாக்கும் காட்சி, டிரெய்லரில் காண்பிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதன் நீளத்தைச் சற்றே குறைச்சிருப்பதாகவும் கூறப்படுகிறது.

லூசு, சைக்கோ உள்ளிட்ட இன்னும் பல தகாத வார்தைகள் படத்தில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ அவை அனைத்தும் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறதாம்.

கழுத்தை வெட்டும் காட்சி, கோரமாக அதிலிருந்து ரத்தம் வழியும் சில ஷாட்கள், கால்கள் துண்டாகும் காட்சி, தலை துண்டிக்கப்படும் காட்சி, வாயில் கத்தி இறங்குவது போல் இருக்கும் காட்சி என வன்முறை நிறைந்த நிறைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

முக்கியமாக பாலியல் ரீதியான சில விஷயங்கள் நீக்கப்பட்டிருக்கிறதாம். ஒரு பெண்ணின் பாலியல் பழக்க வழக்கத்தை விவரிக்கும் வசனம், அது தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதோடு, ஆபாசமான முனகல்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடயே ‘GST’ என்ற வார்த்தைத் தூக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

You might also like