நீதி உன்னைத் தேடி வரும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

(நெஞ்சம்…)

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா? மீசை முறுக்கு

(நெஞ்சம்…)

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

(நெஞ்சம்…)

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

(நெஞ்சம்…)

-1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன்.

குரல்: T.M. செளந்தரராஜன், இசை : K.V. மகாதேவன்.

You might also like