வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அன்புதான்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

அடக்கு! – மனதை அடக்கு!
அகந்தை வழியில் அலையும் மனதை!
                    (அடக்கு)

ஆபத்துக்கு உதவி செய்தால்
பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால்
லாபமுமில்லை!
அன்புக்காக  ஏங்குவதில்
கேவலமில்லை
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால்
கெடுதலுமில்லை!
                 (அடக்கு)

ஒருவருக்கு ஒருவர்
துணை என்பது உண்மை!
இந்த உண்மையை  
நீ ஒப்புக் கொண்டால்
உலகுக்கு நன்மை!

பொறுமையோடு
கருணை சேர்ந்து
பிறப்பது பெண்மை
இதைப் புரிந்து நடக்கும்
பெண்ணின் நெஞ்சம்
பாலினும் வெண்மை!
                   (அடக்கு)

ஆண்கள் என்றும்
பெண்கள் என்றும்
தனித்தனியாக
அந்த ஆண்டவன்
ஏன் பிரித்து வைத்தான்
மிக தெளிவாக!

ஜெகத்தினிலே
ஆணும் பெண்ணும் ஓருயிராக
இங்கே சேர்ந்து வாழும்
தத்துவத்தைச் சொல்வதற்காக!
                      (அடக்கு)

-1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘காதல் வாகனம்‘ திரைப்படத்தில் இப்பாடல் வரிகள் எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

இசை: கே.வி. மகாதேவன்.  குரல்: டி.எம். சௌந்தரராஜன்

You might also like