முகநூலை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றனர்.
முகநூலில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சில வழிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அவற்றில் சில…
புரோஃபைல் லாக் (Profile Lock)
நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இருந்தால் அதனைத் தடுக்க விரும்புபவர்களுக்கு புரோஃபைல் லாக் (Profile Lock) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள முகநூல் கொடுக்கிறது.
அதனை எப்படிப் பயன்படுத்துவது என தெரியாதவர்களுக்காக சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் புரோஃபைலை லாக் செய்வது!
பேஸ்புக் புரோஃபைலை லாக் (Facebook Profile Lock) ஆப்சன் மூலம், உங்கள் கணக்கையும் சுயவிவரப் புகைப்படத்தையும் லாக் செய்து வைக்கலாம். இந்த அம்சத்தின் மூலம், உங்கள் புரோஃபைல் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் நண்பர் பட்டியலில் இல்லாதவர்கள் உங்கள் புரோஃபைலைப் பார்க்க முடியாது. இதுதவிர ஏனைய தகவல்களும் மற்றவர்கள் பெற முடியாது.
நன்மைகள் என்ன?
உங்கள் தனிப்பட்ட டேட்டா பேஸ்புக் புரோஃபைல் லாக் அம்சத்துடன் பாதுகாக்கப்படும். உங்கள் புகைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் யாராலும் திருட முடியாது.
தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தொடர்பு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
எப்படி லாக் செய்வது?
* முதலில் உங்கள் பேஸ்புக் பயன்பாட்டிற்குச் சென்று புரோபைலுக்குச் செல்ல வேண்டும்
* பின்னர் ‘புரோபைல் சேஞ்ச்’ விருப்பத்திற்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்
* இப்போது, லாக் ப்ரொஃபைல் ஆப்ஷனைப் தேர்ந்தெடுத்து அதனுள் செல்லவும்
* அதன் பிறகு, பேஸ்புக் புரோஃபைல் லாக் (Facebook Profile Lock) அம்சத்தின் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு காண்பிக்கபடும்.
* கடைசியாக, உங்கள் கணக்கை லாக் செய்வதற்கு ‘உங்கள் புரோஃபைலை லாக் செய்க’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
நன்றி: முகநூல் பதிவு