உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது  முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா –
இது இன்பம் விளையும் தோட்டம்

(எல்லாரும் ….)

கிணற்று நீரை நிலத்துக்குத்  தான்
எடுத்து தரும் ஏற்றம்

கிளைவெடிக்கும் பயிர்களுக்கு
உயர்வளிக்கும் ஊட்டம்

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர்பார்த்து பொழைக்கணும் -நம்ம
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்
ஒடஞ்சிபோன நமது இனம்
ஒண்ணுவந்து பொருந்தணும்

ஓதுவார் தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே

உலகம் செழிப்பதெல்லாம்
ஏர் நடக்கும் நடையிலே

ஆதிமகள் அவ்வை சொல்லை
அலசிப் பாத்தா மனசிலே

நீதியென்ற நெல்விளையும்
நொிஞ்சி படர்ந்த தரிசிலே

விதியைஎண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்
வேலைசெஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்

நீதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்புசேரணும்
நிரந்தரமா சகலருமே
சொதந்திரமா வாழணும்!

1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த  அரசிளங்குமாி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

இசை – G. ராமநாதன்.  குரல் – T.M. சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்.

இயக்கம் – A.S.A. சாமி

You might also like