எலன் மஸ்க்கின் நம்பிக்கை மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் பிறந்த கனடா – அமெரிக்கத் தொழிலதிபரான எலன் ரீவ் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் – சி.இ.ஓ.
டெஸ்லா மோட்டார்ஸ், சோலார்சிட்டி, பேபால், ஓப்பன்ஆல் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர்.
ஹென்றி போர்டு மிக மலிவான விலையில் கார்களை தயாரித்தார். அப்போது மக்கள் கேட்டார்கள்: குதிரைகளுடன் என்னாச்சு? அதுதான் அவர் எதிர்கொண்ட சவால்.
உங்களுக்கு ஒன்று மிக முக்கியமானதாக இருக்கும்போது, உங்களுக்கு ஏதுவாக இல்லாத தடைகள் வந்தாலும், அதைச் செய்யுங்கள்.
நீங்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்க விரும்பினால், அதுவொரு கேக் செய்வதுபோல. நீங்கள் எல்லாவிதமான பொருட்களையும் சரியான விகிதத்தில் சேர்க்கவேண்டும்.
என்னுடைய ஒரு சிறந்த அட்வைஸ் இதுதான். எப்படி உங்களால் இன்னும் சிறப்பாக காரியங்களைச் செய்திருக்க முடியும் என்று எப்போதும் யோசித்துக்கொண்டே இருங்கள். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
பொறுமை ஒரு நற்பண்பு, அதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதுவொரு கடினமான பாடம்.
நீங்கள் ஒரு மிகப்பெரிய செம்மரமாக வளர விரும்பினால், உங்களுக்கு விதைகள் தேவை, செடிகளை வளர்க்க வேண்டும்.
பிராண்ட் என்பது வெறும் ஒரு பார்வை, காலப்போக்கில் அது எதார்த்தத்துடன் ஒத்துப் போகும். சில நேரங்களில் அது உயரத்தில் இருக்கும். மற்ற நேரங்களில் அருகில் இருக்கும்.
பிராண்ட் என்பது ஒரு தயாரிப்பு பற்றி பல்வேறுபட்ட உணர்வுகளின் தொகுப்பு.
நானில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் பணியைத் தொடரும் சாத்தியங்களைக் குறைக்கும் ஒரு உலகை கட்டமைக்க நான் முயற்சி செய்துவருகிறேன்.
உண்மையில், என்னிடம் ஒரு கணிப்பு இருக்கிறது. 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் தயாராகும் கார்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும். நான் ஹைபிரிட் கார்களைப் பற்றிச் சொல்லவில்லை. முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள்.
உங்களிடம் ஒரு தவிர்க்க முடியாத தயாரிப்பு இருந்தால், மக்கள் அதற்கான விலையைத் தருவார்கள். அதைத்தான் ஆப்பிள் காட்டுகிறது.
நீங்கள் அதைவிட மிக மலிவான செல்போன் அல்லது லேப்டாப்பை வாங்கலாம். ஆனால் ஆப்பிள் மற்றவற்றைவிட மிகச்சிறந்தது. அதனால்தான் மக்கள் அதற்கான விலையைத் தர தயாராக இருக்கிறார்கள்.
உங்களுக்கு விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் எப்போதும் என்ன செய்தீர்கள் என்பது பற்றியும், இன்னும் எப்படி சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இலக்கு எது என்பதும், ஏன் என்பதும் அவர்களுக்குத் தெரியும்போது மக்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள்.
அதுவும் காலையில் பணியாற்றுவதும் வேலையை விரும்பிச் செய்வதும் மிகவும் முக்கியமானது.
வாழ்க்கை என்பது இந்த பூமியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தான்.
இங்கே தோல்வி ஒரு வாய்ப்பு. ஒரு விஷயம் தோற்கவில்லை என்றால், நீங்கள் புதுமை எதுவும் செய்யமுடியாது.
நிலைத்திருத்தல் மிகவும் முக்கியமானது. நீங்கள் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். விட்டுக்கொடுக்க வற்புறுத்தப்பட்டாலும்கூட விட்டுக்கொடுக்காதீர்கள்.
நீங்கள் செய்யும் காரியம் பற்றிய விமர்சனம் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், அதை எப்படி சிறப்பாக செய்திருக்கலாம் என்ற பின்னூட்டம் முக்கியம்.
இதுதான் என் அறிவுரையில் முக்கியமானது: இன்னும் எப்படி சிறப்பாக செய்யலாம் என்று எப்போதும் உங்களை கேள்விகேட்டபடியே இருங்கள்.
ஒரு நிறுவனத்தை விற்கும் திட்டம் என்பது நல்ல ஐடியாவாக இருக்காது என நினைக்கிறேன்.
நான் உருவாக்கும் நிறுவனங்களுக்கு என் சொந்த பணத்தையே முதலீடு செய்கிறேன். அனைத்துக்கும் மற்றவர்களின் பணத்தை செலவிட நான் விரும்பவில்லை.
அது சரியென்றும் நினைக்கவில்லை. நான் தயார் நிலையில் இல்லாமல் யாரிடமும் முதலீடு செய்யுங்கள் என்று கேட்கமாட்டேன்.
நேர மேலாண்மை பற்றிய எந்த நூலையும் நான் படிக்கமாட்டேன்.
எல்லா முட்டைகளையும் ஒரு கூடையில் வைப்பது நல்லதுதான். அப்போதுதான் என்ன நடக்கிறது என்று கண்காணித்து கட்டுப்படுத்தமுடியும்.
– தான்யா