உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.
“இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” எனக் கேட்டார்கள்.
“முன்பைவிட மிகவும் சுவையாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார் ஹாக்கிங்.
“இந்த உடல் நிலையுடன் உங்களால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?” என்று அடுத்த கேள்வி தயக்கத்தோடு கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பதில், “எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன ஆற்றல் உங்களிடம் மீதமிருக்கிறது என்பதே வாழ்க்கையில் முக்கியம்!”