ஜெஃப் பெசோஸ்-ன் நம்பிக்கை மொழிகள்
அமெரிக்கரான ஜெஃப் பெசோஸ் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர், தொழிலதிபர், முதலீட்டாளர். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான் டாட் காம் நிறுவனர், தலைவர்.
அவரது நம்பிக்கை மொழிகள்…
ஒரு நிறுவனத்தின் பிராண்ட் என்பது ஒரு மனிதரின் நற்பெயரைப் போன்றது. அந்த நற்பெயரைப் பெறுவதற்கு கடினமான பணிகள் சரியாக செய்யவேண்டும்.
ஓர் இறுக்கமான பெட்டியில் இருந்து வெளியே வரும் வழிகளில் ஒன்று, உங்களுக்கான பாதையைக் கண்டறிவதுதான்.
நீங்கள் உங்களுடைய பரிசோதனை முயற்சிகளை இரட்டிப்பாக்கினால், ஒரே ஆண்டில் புதுமைகளைப் படைக்கும் உங்களது படைப்பாளுமையும் இரட்டிப்பாகும்.
இரண்டுவிதமான நிறுவனங்கள் இருக்கின்றன.
அதிக கட்டணம் வசூலிப்பதற்காக வேலை செய்பவர்கள் மற்றும் குறைவான கட்டணத்திற்காக வேலை செய்பவர்கள்.
நாங்கள் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்.
அமேசானில் நாங்கள் மூன்று பெரிய யோசனைகளை வைத்திருந்தோம். அதில் 18 ஆண்டுகள் சிக்கியிருந்தோம். அதுவே எங்களுடைய வெற்றிக்கான காரணம். முதலில் வாடிக்கையாளர், கண்டுபிடிப்பு, அடுத்து பொறுமை.
புதுமைகளைச் செய்வதற்கு மோசமான நேரம் என்று ஒன்றில்லை என்பது என் கருத்து.
நம்முடைய எல்லா தொழில்களிலும் நேர்மறையான வளர்ச்சியை அடி முதல் உச்சி வரை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு லாபம் என்பது முக்கியமானது அல்லது நாங்கள் அந்த தொழிலில் இருந்திருக்க மாட்டோம்.
உங்கள் தொழிலின் விவரங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் தோல்வியை சந்திக்கப்போகிறீர்கள்.
உங்களுடைய எல்லை என்னுடைய வாய்ப்பு.
ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பது அதன் பாதை சார்ந்தது. அதுதான் வழியெங்கும் நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள்.
வணிகத்தில் கேட்கப்படும் பொதுவான கேள்வி “ஏன்?” என்பது. அதுவொரு நல்ல கேள்வி. ஆனால் அதற்கு இணையான இன்னொரு கேள்வி “ஏன் கூடாது?” என்பது.
என் சொந்தக் கருத்து இதுதான். எல்லா நிறுவனங்களுக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வை வேண்டும்.
முக்கியமான ஒரு விஷயம், வலுக்கட்டாயமாக வாடிக்கையாளரிடம் கவனம் செலுத்த வேண்டும். இந்த பூமியிலேயே வாடிக்கையாளரை மையப்படுத்திய நிறுவனம் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.
நீங்கள் புதுமையைச் செய்யத் தொடங்கும்போது புரிந்துகொள்ளப்படாமலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
எப்போதும் கண்டுபிடிப்புகளில் தற்செயலான நிகழ்வுகளும் சம்பந்தப்பட்டிருக்கும்.
நீங்கள் வெளியுலகைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
நீங்கள் ஒரு தொலைநோக்கு அணுகுமுறையை எடுக்கும்போது, அடுத்து மக்கள் சுயதேர்வு செய்து கொள்வார்கள்.
நீங்கள் மிகச்சிறந்த அனுபவத்தைக் கட்டமைக்கும்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் அதைப் பற்றி பேசிக்கொள்வார்கள். வாய்ச்சொல் மிகவும் வலிமையானது.
ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவர்கள் 5 பேரிடம் மட்டும் சொல்லமாட்டார்கள். 5 ஆயிரம் பேரிடம் சொல்வார்கள்.
25.02.2022 6 : 30 P.M