மனித மூளையில் இருக்கும் மெக்கானிஸம்!

டேனியல் ஃஹானிமேனின் நம்பிக்கை மொழிகள்: 

***

டேனியல் ஃஹானிமேன், உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர், இஸ்ரேல் – அமெரிக்கர். பிஹேவியரல் எகனாமிக்ஸ் பிரிவில் வல்லவர்.

2002 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவரது நம்பிக்கை மொழிகள்…

புத்திசாலித்தனம் என்பது வெறும் தர்க்க அறிவு மட்டுமல்ல, அது கவனம் தேவைப்படுபோது அதற்குத் தகுந்த ஒன்றை நினைவுகளில் கொண்டுவருவதாகும்.

நீங்கள் நம்பிக்கைமிக்க மனிதராக இருப்பது அற்புதமான விஷயம். அது  உங்களை ஆரோக்கியமாகவும், நெகிழ்ச்சி மிகுந்தவராகவும் வைத்திருக்கும்.

சிலர் பொருத்தமற்றவர்களாகத் தெரிவதால், தோல்வி அடைகிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள், அவர்கள் வலிமை மற்றும் தகுதியுடையவர்களாகத் தெரிகிறார்கள். அதுதான் ஹோலோ விளைவு.

பொருளாதார நிபுணர்கள் மக்கள் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பார்கள். உளவியலாளர்கள், உண்மையில் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பார்கள்.

உங்கள் உடல்நலம், உங்கள் குடும்ப உறவுகள் மற்றும் நட்புவட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுடைய மகிழ்ச்சி இருக்கிறது.

அதையெல்லாம் மீறி, உங்கள் நேரத்தை அவற்றில் எவ்வாறு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியம்.

புயல் வீசும் கடலில் செல்லும் கப்பலின் கேப்டனாக இருப்பதாக மேலாளர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை கட்டுப்பாட்டுடன் எதிர்கொள்கிறார்கள்.

நமக்கு பல எண்ணங்கள் தோன்றுகின்றன. நமக்கு உள்ளுணர்வு இருக்கிறது. நமக்கு உணர்வுகள் இருக்கின்றன.

நமக்கு உணர்ச்சி வெளிப்பாடுகள் இருக்கின்றன. நாம் அவை தொடர்பாக முடிவெடுக்கவேண்டாம்.

நாம் அவற்றைக் கட்டுப்படுத்தவும் வேண்டாம்.

உங்களுக்கு பணம் மகிழ்ச்சியை கொண்டுவராது. ஆனால் பணம் இல்லையென்றால், துயரத்தைக் கொண்டுவந்துவிடும்.

ஏழ்மை என்பது தனிமையைப்போல உணர்ச்சிகளின் துயரத்திற்கான ஒரு காரணங்களில் ஒன்று. முதியவர்களின் தனிமையைக் குறைப்பதற்கான கொள்கை, துயரத்தையும் நிச்சயமாக குறைத்துவிடும்.

நம்முடைய குருட்டுத்தனம் பற்றி நாம் பார்வையற்றவராக இருக்கிறோம். நாம் எத்தனை சிறிய அளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சிறிய அளவில் தெரிந்திருக்கிறோம்.

எத்தனை சிறிய அளவு தெரிந்திருக்கிறோம் என்பதை நம்மால் வடிவமைக்க முடியாது.

பொதுவாக நம்முடைய எண்ணங்கள், பாதிப்புகள் மற்றும் தீர்ப்புகள் பற்றி அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

பொதுவாக மக்களைப் பற்றிய ஆச்சரியமளிக்கும் உண்மைகளைக் கேட்பதைவிட, உங்களுடைய நடத்தையில் கற்றுக்கொள்ளவேண்டிய சில ஆச்சரியம் தரும் விஷயங்களைக் கண்டுகொள்வீர்கள்.

முடிவுகளுக்காக குதிக்கும் மனம் ஒரு கருவி. பெரும்பாலான நேரங்களில் பலரும் அதீத நம்பிக்கையுடன்தான் இருக்கிறார்கள்.

மனிதர்களின் மூளையில் மோசமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு மெக்கானிசம் இருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றிய மிகக் குறுகிய பார்வையையே நாம் வைத்திருக்கிறோம்.

எதிர்பார்க்கப்பட்ட நினைவுகளாக எதிர்காலத்தை நாம் யோசிக்கிறோம்.

-தான்யா

23.02.2022  12 : 30 P.M

You might also like