விருதுக்குப் பெருமை சேர்க்கும் நா.மம்மது!

வாழையடி வாழையென வளர்ந்துவரும் தமிழிசையின் புகழ் பரப்பும் இசைப் புலவர் மம்மதுக்குத் தமிழ்நாட்டின் உமறுப் புலவர் விருது வழங்கியதை வாழ்த்தி வரவேற்கிறோம்.

அதே வேளையில் உமறுப் புலவர் விருதை மம்மதுக்கு வழங்கியதால் முஸ்லிம் புலவர் பெயரிலான விருதை முஸ்லிமுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டதாக நினைத்துவிடக் கூடாது.

இது மரபாக உண்டாகிவிடக் கூடாது. ஏனெனில் சங்கப் புலவர்களில் எவரையும் சாதியாலோ குலத்தாலோ அடையாளப்படுத்துவது இல்லை. உமறுவும் அப்படித்தான்.

உமறுப்புலவர் ஒப்பற்ற தமிழ்ப் புலவர். அவர் பெயரிலான விருதை எந்தத் தமிழறிஞர்க்கும் வழங்கலாம்.

அதைப்போல நா.மம்மது தனித்தமிழறிஞர். தமிழ் இலக்கியம் யாவும் கற்றுத் துறைபோனவர். சிலப்பதிகாரத்தில் கரைகண்டவர். இசைப் பேரறிஞர். இசைப் பேரகராதியைத் தமிழ்க் கலைச் சொற்களால் உருவாக்கியவர்.

மனைவி முதல் மருத்துவர் பேத்திவரை இசைக் குடும்பமாக வாழ்பவர். எந்தத் துறை விருதுக்கும் இவர் ஏற்றவர்.

சொல்லப்போனால் விருதுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் நா.மம்மது. அவருக்கு வாழ்த்துகள்!

நன்றி: கோச்சடை சேவுகன் பதிவு

You might also like