தமிழை உலக மொழியாக்க வேண்டும்!

– எம்.ஜி.ஆர்

“தமிழ் மொழியில் சில சீர்திருத்தங்களைச் செய்தோம். தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறியிருப்பதாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னும் அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.

தமிழை உலக மொழியாக்க வேண்டும். அதற்கு ஆன்றோரும், சான்றோரும் நல்ல தேவையான கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அவ்வாறு கூறினால் அவற்றைத் தமிழக அரசு ஏற்றுச் செய்யும்.

தமிழை யாரும் அழிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழில் வளமிக்க சொற்கள் இருக்கின்றன. அதை இன்னும் வளமாக்க வேண்டும்.

தமிழை யாரும் பாதுகாக்கத் தேவையில்லை. தமிழைத் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். தமிழ் எழுத்தில் இந்த அரசு செய்த சீர்திருத்தங்களைப் பாராட்டித் திராவிடர் கழகம் தீர்மானம் போட்டிருக்கிறது. தமிழில் இன்னும் இன்னின்ன சீர்திருத்தங்களைச் செய்யுங்கள் என்று சொன்னால், அதனை நடைமுறைப்படுத்த அரசு ஆவன செய்யும்’’

– 1979 டிசம்பரில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பேசிய பேச்சு

(நன்றி : தமிழரசு)

You might also like