*
நூல் வாசிப்பு:
“தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை.
சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர் பெற்று எழுகின்றன இந்த மண்ணின் சாமிகள்.
தமிழ்நாட்டின் வயல் வரப்புகளிலும், குளத்தங்கரைகளிலும், தெரு முனைகளிலும் காத்திருந்து மக்களோடு மக்களாக உயிர்த்து எழும் சாமிகள் பற்றிய இந்நூல் தமிழர்களின் தொன்மங்களைத் தோண்டி எடுக்கிறது.”
‘மணா’வின் ‘தமிழ் மண்ணின் சாமிகள்’ நூலுக்கு கலை விமர்சகர் இந்திரன் எழுதிய குறிப்பு.
வெளியீடு: பரிதி பதிப்பகம்,
ஜோலார்ப்பேட்டை,
பக்கங்கள் – 102,
விலை ரூ. 100.
அலைபேசி : 72006 93200
17.12.2021 12 : 30 P.M