நூல் வாசிப்பு :
*
“ஏதாவது ஒரு நாவல் படமாக்கப்படப் போகிறது என்ற தகவலை வாசிக்க நேர்ந்தால், உடனே அந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை வடிவம் எழுதுவேன்.
பிறகு அந்தப் படம் வெளியான போது, அதன் திரைக்கதைக்கும், எனது திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்து பார்ப்பேன்.
அந்தப் பயிற்சி தான் என்னைத் திரைக்கதை ஆசிரியனாக்கியது.
‘பதேர் பாஞ்சாலி’யைப் பொறுத்தவரை அதற்கு முறையாக எழுதப்பட்ட திரைக்கதை என் கைவசம் இல்லை. திரைக்கதை முழுமையாக எனது மனதில் இருந்தது.
ஒன்றிரண்டு குறிப்புகளைத் தவிர, அந்தப் படத்திற்குத் தனியாகத் திரைக்கதை எழுதப்படவே இல்லை.
அது போலவே படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பெரும்பாலும் விபூதி பூஷன் நாவலில் இருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது.
காரணம் – உரையாடல் எழுதுவது எப்படி என்று எனக்குத் தெரியாது என்பதே”
- எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘பதேர் பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.