மனிதப் பிறவியின் பயன் என்ன?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

(ஏதோ மனிதன்…) 

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
தன் இயற்கை அறிவை மடமை என்னும்
பனித்திரையாலே மூடுகிறான்

(ஏதோ மனிதன்…) 

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண் பேதைகள் என்றும் பேடிகள் என்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான்

(ஏதோ மனிதன்…) 

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்

காக்கை குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்

ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்
அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

(ஏதோ மனிதன்…) 

– 1961-ம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பனித்திரை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.

You might also like