கூட்டணி தர்மம் பற்றி அண்மையில் மருத்துவர் ராமதாஸ் பேசியிருந்தார்.
பா.ம.க.வுக்கு அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதற்கு அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு தராததே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அ.தி.மு.க அதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறது.
“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க விலகி விட்டது. அவர்கள் விலகிய பிறகு பா.ம.க. தலைவர் பேசும் கருத்துக்குப் பதில் கூற வேண்டியதில்லை” என்றிருக்கிறார் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய பாணியில் பேசியிருக்கிறார்.
“யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்து எங்களுக்குப் பழக்கம் இல்லை. மருத்துவருடைய கருத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை”
தேர்தல் முடிந்து பல மாதங்களுக்குப் பிறகும் இன்னும் அதற்கான எதிர்வினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.