மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜியின் டெல்லி வருகை ஊடகங்களுக்கான தீனி ஆகியிருக்கிறது.
பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வரும் அவர் மோடியைச் சந்தித்துத் தன்னுடைய மாநிலம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.
அதோடு டெல்லியில் மம்தா சந்தித்த இன்னொரு வி.ஐ.பி. – சுப்பிரமணியன் சுவாமி.
வண்ணமயமான சால்வையைப் போர்த்தி சுவாமியை வரவேற்ற மம்தா, அவரிடம் தனியாகவும் ‘ஆலோசனை’(!) நடத்தியிருக்கிறார். இதுதான் டெல்லி ஊடகங்களில் சிறப்புச் செய்தி ஆகியிருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிற நிலையில், அவரை மம்தா சந்தித்திருப்பது எதற்காக என்கிற கேள்வியைப் பலரும் எழுப்பியிருக்கிறார்கள்.
அதோடு சுவாமி தனது வலைத் தளப்பக்கத்தில் மோடி தலைமையியலான பா.ஜ.க எதை, எதைச் செய்யத் தவறியிருக்கிறது என்றும் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
ஆக – சுவாமி ஊடகங்களுக்கும், அரசியல் ‘நோக்கர்களுக்கும்’ தீனி போடுகிற, விவாதிக்க வைக்கிற வேலையைத் துவக்கிவிட்டார் போலிருக்கிறது!