எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதலில் எழுதிய பாடல் இடம் பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்”.
பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”.
இந்தப் பாடலுக்கு முதலில் ‘ஓகே’ சொன்னவர் அறிஞர் அண்ணா. அடுத்து எம்.ஜி.ஆர்.
அவர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன்.
வாலியிடம் எம்.ஜி.ஆரை சாரதா ஸ்டூடியோவில் அறிமுகப்படுத்தியவர் ப.நீலகண்டன்.
அப்போது எம்.ஜி.ஆர் வாலியிடம் “நான் தான் ராமச்சந்திரன்… நடிகர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது தான் வாலிக்கு ஆச்சர்யம்.
அதன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் வாலி எம்.ஜி.ஆரிடம் இப்படிச் சொன்னார்.
“அண்ணே.. மனிதர்களில் நான் எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கிறேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீங்க தான்”