பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

(மண்ணுக்கு…)

வாடிய நாளெல்லாம்
வருந்தி வருந்தித் தவமிருந்து

தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே

மலடி மலடி என்று
வையகத்தால் ஏசாமல்

தாயென்ற பெருமை
தனை மனங்குளிரத் தந்தவளே

(மண்ணுக்கு…)

அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்

சிரிச்சா முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதரும்

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

(மண்ணுக்கு…)

– 1958-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

You might also like