தமிழ்த் திரையுலகின் சாதனை மன்னன் என்று போற்றப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சாதனைத் துளிகளில் சில:
☀ நாடகமாக மேடையேற்றப்பட்டு சமூக படமாக எடுக்கப்பட்ட முதல் காவியம் – என் தங்கை.
☀ கிருஸ்தவ வேத நூல் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையில் வெளிவந்த திரைப்படம் – ஜெனோவா.
☀ அரபுக் கதைகளை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்
1. குலேபகாவலி
2. அலிபாபாவும் 40 திருடர்களும்
3. பாக்தாத் திருடன்.
☀ பூமி உருண்டை செட் போடப்பட்டு பாடல் அமைத்த காவியம் – ‘புதுமைப்பித்தன்’.
பாடல் “உள்ளம் ரெண்டும் ஒன்று…”
☀ ராணுவத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் காவியம் – சர்வாதிகாரி.
☀ எக்கோ ரிக்கார்டிங் முறையில் பாடல் பதிவு செய்யப்பட்ட முதல் காவியம் – சர்வாதிகாரி.
☀ ராணுவத்தை கதையில் காண்பித்த திரைப்படங்கள்.
1. அந்தமான் கைதி
2. பணம் படைத்தவன்
3. கன்னித்தாய்.
☀ விஞ்ஞான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் – கலையரசி.
☀ கதாநாயகனாக நடித்தும் பாடல்களே இல்லாமல் புரட்சி நடிகர் நடித்த படம் மந்திரிகுமாரி.
☀ கதாநாயகியே இல்லாமல் நடித்த படம் – என் தங்கை.
☀ குழந்தைக்காக கதை அமைக்கப்பட்ட திரைப்படங்கள்
1. கன்னித்தாய்
2. பெற்றால் தான் பிள்ளையா.
☀ கதாநாயகனாக நடித்து ஜோடிப் பாடல்கள் இல்லாத திரைப்படங்கள்-
1. மந்திரிகுமாரி
2. மலைக்கள்ளன்
3. கூண்டுக்கிளி
4. அரசிளங்குமரி
5. காஞ்சித் தலைவன்.
☀ மருத்துவராக (டாக்டர்) நடித்த படங்கள்
1. தர்மம் தலை காக்கும்
2. ஆயிரத்தில் ஒருவன்
3. புதியபூமி.
☀இன்ஜினியராக நடித்த படங்கள்
1. கொடுத்து வைத்தவள்.
2. நான் ஏன் பிறந்தேன்.
☀ வக்கீலாக நடித்த திரைப்படங்கள்
1. நீதிக்குப் பின் பாசம்.
2. கலங்கரை விளக்கம்.
3. மாட்டுக்கார வேலன்.
☀ எண்களில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
1. அலிபாபாவும் 40 திருடர்களும்.
2. ஆயிரத்தில் ஒருவன்.
3. ரகசிய போலிஸ் 115.
4. அவசர போலிஸ் 100.
☀ தங்கைகளின் வாழ்விற்காக எடுக்கப்பட்ட படங்கள்
1. என் தங்கை
2. அந்தமான் கைதி
3. என் அண்ணன்
4. அரசிளங்குமரி
5. நினைத்ததை முடிப்பவன்
6. தேர்த்திருவிழா
7. எங்கள் தங்கம்
8. இதயவீணை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் நடித்த அனைத்துப் படங்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை மட்டுமே போதித்து நடித்தவர். இந்தப் பெருமை உலகில் இவர் ஒருவரையே சேரும்.
– நன்றி முகநூல் பதிவு