“தோல்வியில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள்”

அமெரிக்கத் தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது. அவரது நம்பிக்கை மொழிகள்..

இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.

அதிக எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி.

உயர்ந்த இலக்குகளை நிர்ணயுங்கள். போட்டியை ஊக்கப்படுத்துங்கள். வெற்றியைத் தக்கவையுங்கள். மிகச்சிறந்த தேர்ந்தெடுப்பு, மிகச் சரியான நேரம், நேர்மையான பாராட்டு வார்த்தைகளுக்கு இணையாக வேறு எதுவும் இருக்கமுடியாது.

தொழிலில் இறங்குங்கள். எல்லாவற்றையும்விட அதிகமாக அதன்மீது நம்பிக்கை வையுங்கள்.

உங்களுடைய அடுத்த மூவ் என்ன என்பது பற்றி எல்லோரையும் யூகிக்க வையுங்கள்.

நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழிலை விரும்பினால், அவர்களுக்காக நீங்கள் உழைப்பதாக அவர்கள் உணரவேண்டும். உங்களுக்காக அவர்கள் வேலை பார்ப்பதாக நினைக்கக்கூடாது.

மிகவும் எதிர்மறையான ஒன்றில் இருந்து நீங்கள் நேர்மறையான வெற்றியைப் பெறவேண்டும். நீங்கள் கடுமையாக உழைத்தால் போதும்.

உங்கள் பணியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டால், நீங்கள் உங்கள் ஸ்டோரில் உள்ள பணியாளர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இதுதான் வால்மார்ட்டின் மிக முக்கியமான ஒரே ஒரு பார்முலா.

நீங்கள் வேலையை நேசிக்கும்போது, ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த சிறந்தவற்றை அளிக்க முயற்சி செய்வீர்கள். விரைவில் இந்தப் பழக்கம் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஜூரம்போல தொற்றிக் கொள்ளும்.

வாடிக்கையாளருக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தி, அதை வழங்குவதில் முயற்சி செய்யுங்கள்.

தேவையால்தான் நம்முடைய பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரிடமும் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

எல்லோரும் ஒரே வழியிலேயே செய்யும்போது, அங்கே ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை நீங்கள் கண்டறிந்து, அவர்களுக்கு நேரெதிரான பாதையில் செல்லுங்கள்.

மிகச் சிறந்த தலைவர்கள் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்று, தங்கள் ஊழியர்களின் சுயமரியாதையை உயர்த்துவார்கள். மக்கள் தங்களை நம்பும்போது, அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பது வியப்பளிப்பதாக இருக்கும்.

உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள். தோல்விகளில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள். உங்களை சிக்கலாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதார்த்தமாக இருங்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் எதார்த்தமாக வைத்திருங்கள். எப்போதும் வேடிக்கையாக இருப்பது உற்சாகத்தைத் தரும். எல்லாமே தோல்வியில் முடிகிறது என்றால் காஸ்ட்யூம் போட்டுக்கொண்டு ஒரு சாதாரணப் பாடலைப் பாடுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் கற்றுக் கொண்டேன். உங்களுடைய ஈகோவை மக்களிடம் செயல்படுத்திப் பார்ப்பது மிகச்சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கான சரியான பாதையாக இருக்காது.

எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுங்கள். அதை உங்கள் தேவையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் வார இறுதி நாட்களில் வேலை செய்ய விரும்பாவிட்டால், நீங்கள் சில்லறை வர்த்தகத்தில் இருக்கமுடியாது.

  • தான்யா

20.02.2021 03 : 35 P.M

You might also like