ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

சூதாடி மாந்தர்களின்
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை – சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை
                                         (சொல்ல…)

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே
                                         (சொல்ல…)

– 1959-ம் ஆண்டு  ‘உலகம் சிரிக்கிறது’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

20.02.2021  2 : 45 P.M

You might also like