எப்போதும், எதற்காகவும் பின்வாங்காதீர்கள்!
சீனாவில் அலிபாபா குரூப்ஸ் எனப்படும் இணையவழி தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜாக் மா. போர்ப்ஸ் பத்திரிகை அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் சீனத் தொழிலதிபர். அவரது நம்பிக்கை மொழிகள்…
இணையம் மட்டும் இல்லையென்றால், இந்த ஜாக் மா இல்லை, அலிபாபா இல்லை. நான் ஒரு சாதாரண ஆள்.
நான் ஒன்றும் தொழில்நுட்ப நிபுணர் அல்ல. என்னுடைய வாடிக்கையாளர்கள், சாமானிய மக்களுடைய கண்களின் வழியாகத் தொழில்நுட்பத்தைப் பார்க்கிறேன்.
என்னுடைய வேலையே மற்றவர்களுக்கு வேலை பெற்றுத்தர உதவுவதுதான்.
போட்டி கடுமையாக இருந்தாலும், முதல்நாளில் கண்ட அந்தக் கனவை அப்படியே வைத்திருங்கள். பலவீனமாக எப்போது உணர்ந்தாலும், அது உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.
இளையவர்களுக்கு உதவுங்கள். சிறியவர்களுக்கு உதவுங்கள். ஏனெனில் சிறியவர்கள்தான் பின்னாளில் பெரியவர்களாக மாறுவார்கள். இளையவர்களின் மனத்தில் கனவு விதைகளை விதைக்கும்போது, அவர்கள் வளரும்போது, அவர்கள் இந்த உலகத்தை மாற்றுவார்கள்.
என்னை நானே மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறேன். ஏனெனில் எனக்குத் தெரியும், நான் மகிழ்ச்சியாக இல்லையென்றால் சக தோழர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். என் பங்குதாரர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், என் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
அரசுடன் இணைந்து தொழில் செய்யாதீர்கள். அவர்களைக் காதலியுங்கள். அவர்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
நம்மிடம் பணம் இருக்கும்போது, நாம் தவறுகள் செய்யத் தொடங்குவோம்.
எப்போதும் நாம் இருபது ஆண்டுக்கால திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்துவிட முடியாது.
நீங்கள் எந்த முயற்சியையும் செய்யாதபோது, வாய்ப்புகள் இருப்பதை எப்படி அறிவீர்கள்?
உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது, எப்போதும் பின்வாங்காதீர்கள். பின்வாங்குதல் மிகப்பெரிய தோல்வியாக இருக்கும்.
வாழ்க்கை மிகவும் குறுகியது. மிகவும் அழகானது. வேலையில் எப்போதும் சீரியஷாக இருக்காதீர்கள். வாழ்க்கையை அனுபவியுங்கள்.
எங்கே புகார்கள் இருக்கின்றனவோ, அங்கே வாய்ப்புகள் இருக்கின்றன.
நீங்கள் சாதாரண மனிதராக இருக்கும்போது, உங்களுடைய மூளையைத்தான் நம்புவீர்கள். உங்கள் வலிமையை அல்ல.
வருவாயைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இன்று பணம் சம்பாதிப்பது மிக எளிதானது. ஆனால் சமூகப்பொறுப்புடன், உலகை முன்னேற்றக்கூடிய நிலைத்திருக்கும் பணத்தைச் சம்பாதிப்பதுதான் மிகவும் கடினமானது.
நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணிகள், சமூகத்திற்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நீங்கள் அறிவதில்லை.
உங்கள் போட்டியாளரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். காப்பி அடிக்காதீர்கள்.
நான் விரும்பக் கூடியவனாக இருக்க விரும்பவில்லை. நான் மதிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு செய்யமுடியும் என்று உங்களுக்கு எப்போதுமே தெரிவதில்லை.
நான் தோல்வி அடைவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. குறைந்தபட்சம் என் கான்செப்ட்டை மற்றவர்களுக்குக் கடத்துவேன். நான் வெற்றி அடையவில்லை என்றாலும்கூட, யாரோ ஒருவர் வெற்றி பெறுவார்.
நான் ஒரு பார்வையற்ற புலியின்மீது பயணிக்கும் பார்வையற்ற மனிதன் என்று என்னை அழைத்துக்கொள்வேன்.
எப்போதும் நமக்கு பணம் பற்றாக்குறையாக இருப்பதில்லை. நமக்குக் கனவுகள் உடைய மனிதர்களின் பற்றாக்குறை, அந்தக் கனவுகளுக்காக உயிர் துறக்கும் மனிதர்கள்.
உங்களிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறுமை. உங்களுக்குச் சரியான நபர்களே தேவை, சிறந்த நபர்கள் அல்ல.
– தான்யா
27.01.2021 12 : 30 P.M