மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

இன்றைய சூழலில் பெரும்பாலோனோர் பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகி நிம்மதி இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்தைக் குறைத்து உங்கள் செயல்களை நிதானமாக மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்.

  • காலையில் திட்டமிட்டபடி நேரத்திற்கு எழுந்து விடுங்கள்.
  • எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
  • காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  • முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
  • சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக் கூடிய இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
  • சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாகப் பேருந்து தாமதமானால் இதைச் செய்வேன் என்பது போன்றவை.
  • தவறாய் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
  • சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வெடுங்கள் எந்தத் தொந்தரவும் இன்றி.
  • உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
  • வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
    08.01.2021   01 : 45 P.M
You might also like