ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டும்!

கடவுள் வாழ்த்துப் பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து…

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாள்பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்
                                                      (கடவுள்…) 

ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும்போது
இம‌ய‌ம் போலத் தெரிந்திட‌ வேண்டாமோ
பிற‌ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட‌ வேண்டாமோ
அது விரியும்போது
குன்றைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
                                                      (கடவுள்…) 

வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்தக் கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ
                                                      (கடவுள்…)

You might also like