வைரமுத்துவை வளர்த்தெடுத்த வடுகபட்டி எனும் நாற்றங்கால்!

நதிமூலம் – பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது. கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நதிமூலத்திற்காக மதுரை, பாரதிராஜாவின் நதிமூலத்திற்காக தேனி, அல்லி நகரம் என்று பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டதைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்துவின் நதிமூலத்தைத் தேடி அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்குச் சென்றிருந்தேன். ஆண்டுகள் பல கழிந்தாலும் இன்னும் வடுகபட்டியில் அன்று […]

கவிஞர் ராசி அழகப்பன்: வயதை வெல்லும் வாலிபர்!

கிராமத்தில் இருந்து வந்த இளைஞர், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு நல்லதொரு உதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.

என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!

“திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்” என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.

கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!

“உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்” என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல. அப்படிதான் இருந்தன சுதீர் செந்திலின் கேள்விகள். சில பதில்களுக்கு கிருண்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்போல அடித்து ஆடியிருக்கிறேன். சில இடங்களில் கவாஸ்கர் போல தடுத்து ஆடியும் இருக்கிறேன். Anyway, அனைத்து கேள்விகளுக்கும் காய்தல் உவத்தில் இன்றி மனத்தூய்மையோடு பதில் அளித்திருக்கிறேன். […]

குறள் வழியே தமிழ் கற்கலாம்!

பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது. மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது தோகைப்பரப்பில் காற்று மோதுவதால் தடுமாறும். ஒரு பக்கமாக இழுபடும். அவ்வாறு காற்றின் போக்கிற்கேற்பத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள கால் மாற்றி வைப்பதுதான் மயில் ஆடுவதுபோல் தோன்றுகிறது. பெய்தல் என்றால் சிறிய விடுபாடுகூட இல்லாமல் நிறைத்துக்கூடி விழுவது. மழை […]