சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!
உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.
இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன்…!
அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். ஆனால் மிஷனரிகள். அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார். தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் […]
கொல்கத்தாவில் விருது: எஸ்.ரா தமிழில் ஏற்புரை!
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து… “பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கப்பட்டிருந்த ‘மீரா இன்’ போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. […]
+2 தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் அதிக தேர்ச்சி!
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வெழுத 8 லட்சத்து 2,568 பள்ளி மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.21 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் […]
உயிர்களைப் பேதமின்றி காக்கக் தொடங்கப்பட்ட சங்கம்!
உலகெங்கும் ஆண்டுதோறும், மே மாதம் 8ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் மற்றும் உலக செம்பிறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த நாள். ஹென்றி டியூனாண்ட் மே 8, 1828ம் வருடம் சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் பிறந்தார். இவர், தன்னுடைய வேலை நிமித்தமாக, 1859ம் வருடம் இத்தாலியில் உள்ள சால்ஃபரீனோ என்ற நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது. அப்போதுதான், போர் நடந்து […]
வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!
வலம்புரிஜான். ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர். தொலைக்காட்சியில் இயற்கை உணர்வைப் போதித்தவர். பழகியவர்களிடம் உண்மையான இயல்போடு இருந்தவர். எல்லாவற்றுடன் ‘தாய்’ வார இதழை முன்னிலைப்படுத்திய ஆசிரியர். பல பத்திரிகையாளர்களை அரவணைத்து வளர்த்தவர். அவரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம். பத்திரிகையாளரும், கவிஞரும், தற்போது கவனிக்கத்தக்க ஆய்வாளராகவும், பேச்சாளராகவும் பன்முகம் கொண்ட கடற்கரயின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் […]