இந்தியாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம்!

பரண்: பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு உள்ளாகையில், இங்கு அதுவும் சமய, வேதாந்தக் கருத்துக்கள் வேரூன்றிய நாட்டில் தற்போது கருத்து நுண்மைக்கு ஆதரவில்லாமல் போனதற்குக் காரணம் கூற முடிகிறதா? பிரமிள் பதில்: இந்தியாவில் புத்தர் செயல்பட்ட காலமும், அவரது கருத்துக்கள் உணரப்பட்ட காலமும் தவிர, மற்றைய காலங்களில் குருட்டு […]

இப்படியும் ஒரு ‘குரு’ பக்தி!

மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களைப் பற்றி வரலாற்று நூலின் முன்னுரையில் உ.வே.சாமி நாதன் அவர்களை இப்படி எழுதி இருக்கிறார். என் ஆசிரியரின் முழுப் பெயரையும் இவ்வளவு நாள் கழித்தும் குறிப்பிட்டு எழுத என் பேனா கூசுகிறது.

மதுவிலக்கு: வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது!

சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.

இந்த மதுவிலக்கு – காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும்.

என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’ பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா? என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன். நான் எவ்வளவு […]

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு. உங்களுடைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் அறிந்து கொண்டு சட்டத்திற்கிணங்கிய காரியங்களிலே தலையிடுவோர்களை சிறிதேனும் தாட்சண்யமின்றி எவ்விதங்களாலும் அடக்கி விடுங்கள். மனத் துணிவுடையவர்களிடம் போலீஸாரின் குறும்பு செல்லமாட்டாது. மனத்துணிவுடையவர்களை பிசாசுகூட அணுகாது. – 1907 மே மாதம் 4-ம் தேதியன்று பாரதியார் எழுதியது.

“வாங்க சேர்ந்து குளிப்போம்”- காமராஜர்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது. குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு. அங்கிருந்த காவலரை பார்த்து, இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட […]