தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!

2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல். இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து ஒருதாய் மக்கள் என்ற அடிப்படையில் இயக்கும் என்பது இலங்கைவாழ் மக்களின் எண்ணமும் கூற்றுமாக இருக்கிறது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி இலங்கை அரசியலின் ஒரு புரட்சிகரமான ஆட்சியை நிறுவுகிறது. இலங்கை வரலாற்றில் […]

ஊழலின் பங்குதாரர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆணையத்தின் கண்காணிப்பை மிக இயல்பாக மீறி வாக்காளர்களுக்குத் தரப்படும் பணமும் பொருட்களும் இலவச வாக்குறுதிகளும் கூட, தேர்தலுக்குப் பின், தான் செய்யப்போகும் ஊழலில் மௌனமான பங்குதாரராக ஆக்கத் தான்.

வளர்ப்பது யார்?

சமூகம் நம்மை வளர்த்தது. அதற்கேற்றபடி நாம் இருந்தோம். நம் வாரிசுகளை சமூக ஊடகங்கள் வளர்க்கின்றன. அதற்கேற்ற படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உண்மையைச் சொல்வது சிரமமாகிவருகிறது!

“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். உலகத்தைப் பற்றி ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமாகத் தெரிந்து கொள்கிறார்கள். தாங்கள் கேட்க விரும்பும், தங்களுக்குப் பிடித்தமான தகவல்களை மட்டுமே மக்கள் அறிந்து கொள்கிறார்கள். நம்பத் தகுந்த உண்மைகளையோ, அவர்கள் கேட்க விரும்பாத உண்மைகளையோ அறிந்து கொள்வதில்லை. இதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் தற்போதைய விவாதப் பொருள். இன்றைய உலகில் உண்மையைச் […]

தமிழர்களின் நம்பிக்கையை இழந்த ‘தமிழர்’ கட்சிகள்!

நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், மீதமுள்ள 29 […]