இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன்…!

அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள்.  ஆனால் மிஷனரிகள். அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார். தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன‌ என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் […]

குழந்தையாயிருந்த காலம் வாழ்க்கையின் பொற்காலம்!

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன். அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை விட்டுப் பிரியாமல் எப்போதும் உங்களோடு இருக்கும் உறவு நீங்கள் மட்டுமே. இ). யாரும் உங்களுடைய பேருழைப்பைப் பார்க்கமாட்டார்கள், அதன் விளைவை மட்டும்தான் பார்ப்பார்கள். ஈ). மனமுடைந்து போவதும் தோல்விகளும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பகுதிகள். உ). இவ்வுலகத்தில் எங்கே தேடியலைந்தாலும் நீங்கள் வாழும் வீட்டினைப்போல் இதமாவது […]

சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!

புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.

துயரத்திலிருந்து எப்படி விடுபடுவது?

“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது அனைத்து விதமான சூழல்களிலும் வாழ வேண்டும். வெறும் அனுபவத்திற்காகவாவது! வாழ்க்கை மிக அரிதான அற்புதமான ஒன்று. நாம் அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் வாழ நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். அதீத துயர் நிலையிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அதிகளவிலான துயரத்துடன் வாழ்க்கையில் நம்மால் பயணிக்க முடியும். அது […]

என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!

1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும் ஒருவன். திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973 மே மாதம் 20-ம் தேதி நடந்தது. அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பாலமேட்டின் பக்கத்தில் அலங்காநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மாணிக்கம்பட்டி என்ற ஊரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். நான் அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கி […]

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்