விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு கார்ட்டூனை ஆனந்த விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது. வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் ஒட்டுமொத்த விகடன் இணையதளமே முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட மறுநாள், “ஏன் முடக்கக் கூடாது” […]

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் (PRATHAM) அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை […]

எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!

ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர். மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம் ஊரில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணம் வாங்க மக்கள் மறுத்து விட்டனரே என்பது மக்களிடம் விண்ணப்பத்தை வைத்த இளைஞர்களை யோசிக்க வைத்தது. மக்களிடம் நல்லதைக் கொண்டு சேர்த்தால் மக்கள் அதை வாங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. […]

பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!

ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.

மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 7ல் வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதித்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் […]

பெருமை சேர்க்கும் தமிழரின் தொன்மையின் மரபு!

தாய் தலையங்கம்:  தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் கூடவே தமிழ் மொழியின் தொன்மையையும் ஒருசேர உணர்த்தி இருக்கின்றன.  ஆனால், அதை உணர்த்துவதற்கு பொதுவெளியில் அதை கொண்டு செல்வதற்கே பல தடை நிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது. ஆதிச்ச நல்லூர், துவங்கி கீழடி வரை பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் வரலாற்று ரீதியான தொன்மையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய விழாவில் கலந்து கொண்டு வெளிப்படுத்தியிருக்கும் தகவல் மிக […]