சமுதாயத்தின் ஆதாயங்கள் மற்றும் சுமைளை பகிர்ந்து கொள்வோம்!

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. சமூக நீதி (Social Justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. சமூக வேறுபாடுகளை பொதுவாக, பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் […]

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ அவரைக் கண்டால் உடனே நான் எழுந்து நின்றுவிடுவேன். அவர் முன் உட்காரவே மாட்டேன். இதைக் கண்டு பலமுறை அவர் என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டு, “நீங்க நின்னா நானும் நிப்பேன். நீங்க உட்கார்ந்தா தான் நானும் உட்காருவேன்” என்பார். பிறகு […]

முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!

நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை என்று நூலைத் ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை ‘கேரள சமாஜம்’ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக்கட்சியின் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை முன் வைத்தது மிகச் சிறப்பானதாகும். இந்த நூலிற்கான ‘ஆசிரியரின் விளக்கம்’ பகுதியில் […]

காமமே இல்லாத காதலும் உண்டு!

கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன்… இரண்டே இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள்! ஐந்தாறு துணைக் கதாபாத்திரங்கள்! ஒரு வீடு, ஒரு மருத்துவமனை, ஒரு ஏரி இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மணி நேர படத்தை – கண்ணிறைந்த பசுமைக் காட்சிகளோடு – காலத்தால் அழியாத காவியமாகக் கொடுக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது இப்படம்! இது பேசும் முக்கிய அம்சமான மரணத்தைப் பற்றி தம்பி […]

இலக்கியத்தில் அப்டேட் ஆகுமா அரசு?

அண்மையில் நடந்த, நான் பங்கேற்ற கூட்டமொன்றில் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுடன் உரையாடி, மாணவர்களைக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேச வைத்து, எழுத்தாளர்கள் குறித்து வினாடி வினாப் போட்டியும் வைத்தோம். எல்லாமே எழுத்தாளரை மையமிட்டுத்தான். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் (தனியார் அறக்கட்டளை நடத்தும்) ஊட்டி இலக்கிய விழாவில் மாலை நேர அரங்கில் என்னுடைய நாவல் “நிழல் பொம்மையை” முன்னிட்டு எழுத்தாளர் திலீப் குமாருடன் உரையாடுகிறேன். இப்படி எழுத்தாளரை, அவரது நூலை முன்னிலைப்படுத்தி இலக்கியத்தை புரொமோட் செய்யும் போக்கு அனேகமாக […]

டெல்லியை ஆளப்போகும் மாணவர் அமைப்புத் தலைவி!

புதிய முதலமைச்சர் ரேகாவின் ’பயோடேட்டா’ ! நாட்டின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 3-வது முறையாக இந்த தேர்​தலிலும் காங்​கிரஸ் கட்சிக்கு ஒரு தொகு​தி​யிலும் வெற்றி கிடைக்க​வில்லை. அந்த கட்சி 67 தொகுதிகளில் காப்புத்தொகையை […]