தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பித்தங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு. திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழிக் சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகள் வழங்கி விழிப்புணர்வு […]

இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது. “எங்கள் பெரியார்” என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. சிறந்த கவிதை நூலுக்கான விருது கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கும், சிறந்த சிறுகதைக்கான விருது எழுத்தாளர் ஜெயராணிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நாவலுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் கணேசன், சிறந்த அபுனைவுக்கு எழுத்தாளர் அ.ராமசாமி, […]

தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் […]

தங்கமாய் மதிப்போம்; தண்ணீரை வீணாக்கமாட்டோம்!

உலக தண்ணீர்த் திருநாளான இன்று மனிதகுலம் மூளையைச் சூடாக்கிச் சிந்திக்க வேண்டும் உலகத் தண்ணீரை அதிகம் உறிஞ்சுவது மனிதனும் விலங்கும் தாவரங்களும் பறவைகளும் அல்ல; தொழிற்சாலைகளும் வேளாண்மையும்தாம் ஒரு கார் உற்பத்தி 4 லட்சம் லிட்டர் நன்னீர் குடிக்கிறது ஒரு கோப்பையின் காஃபித் தூள் 140 லிட்டர் தண்ணீர் பருகுகிறது ஒரு ரொட்டித் துண்டின் உற்பத்தியில் உள்ளிருக்கிறது 430 லிட்டர் தண்ணீர் ஒரு மெட்ரிக் டன் இரும்பு 270 மெட்ரிக் டன் தண்ணீரில் தயாராகிறது தொழில் – […]

எனக்காக எழுதிய பாடல்தான் “ஆடைகட்டி வந்த நிலவு!”

பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் பகிர்ந்த நினைவுகள்: எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் அவுகளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்’னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு […]

அபூர்வமாய் ஒன்றிணைந்த அன்றைய நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: விழா ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர்கள் ஜெமினி கணேசனும் ஜெய்சங்கரும் எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த மூன்று பேரும் ஒன்றிணைந்து நடித்ததில்லை.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம் ‘முகராசி’. ஜெய்சங்கர், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, கால்ஷீட் பிரச்சனையால் பின்னர் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.