சுமை…!

யாருக்கு இல்லை? புல்லின் நுனிக்குப் பனித்துளி நத்தைக்கு அதனைக் கீழிழுக்கும் பழம் பிச்சைக்காரப் பெண்மணிக்குக் கழுத்தில் தொங்கும் தூளி பள்ளிச் சிறுவனுக்குப் பயன்படாத சிந்தனைகளடங்கிய புத்தப்பொதி மலேசிய மாமாவுக்கு மூச்சுத் திணறவைக்கும் தொந்தி வேலை கிடைக்காத அக்காவுக்கு மீதமிருக்கும் நாட்கள் உன்னிப்பாகப் பார்த்தால் உயிர் கூடத்தான்! – லட்சுமி குமாரன்

நகலன் – சிறுகதை!

“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”

உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின் கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான். “நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான். தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப் பார்த்துப் பித்தன் சொன்னான்- “தேங்காய்ப் பொறுக்கிகளே! உங்களை எப்போது பொறுக்கப் போகிறீர்கள்? அப்படிப் பொறுக்கினாலும் சிந்திப் போன உங்கள் நீரை எப்படிச் சேகரிப்பீர்கள்? நீங்கள் உடைந்து துண்டு துண்டாகிப் போனதை உணரவில்லையா? வீட்டிலும், வெளியிலும் நீங்கள் சிதறிக் கிடப்பதை அறியவில்லையா? மகன் என்றும், தந்தை என்றும், அண்ணன் […]

இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது?

வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சலிப்பூட்டுகிறது; காற்று போல நீர்போல இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது.?

வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!

வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

தன்னைத் தானே நேசித்தலின் அடையாளம்!

ஒன்று தெரியுமா உங்களுக்கு? ஃப்ளெமிங்கோ பறவைகளைக் கூட்டமாய்க் கனவு கண்டால் நம்மை நாமே ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்.