வாழ்வை அழகாக்கும் உறவுகள்!

இன்றைய நச்: மனம் பொருந்திய மனிதர்களோடு உறவாக இருங்கள்; அப்போதுதான் வாழ்வின் அழகு என்னவென்று தெரியும்! – வண்ணதாசன்

நமக்கானது நம்மிடமே வந்து சேரும்!

தாய் சிலேட்: பலவீனமான கட்டத்தில் நாம் இருந்தாலும் நமக்கானது நம்மிடத்தில் வந்து சேரும்; நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! முஸ்தபா ஹோசனி

இளமையாக வைத்திருக்க உதவும் ’தங்க’த் தேநீர்!

மே – 21: இன்று சர்வதேச தேநீர் தினம் காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ கடை தான் அதிகம் பேசப்படுகிறது. மழைக்காலம், கோடை காலம் என்றாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் கடை என்றால் அது டீ கடையாகத்தான் இருக்கும். அலுவலக பணியாளர் என்றாலும் சரி, ஆட்டோ ஓட்டும் […]

துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?

தாய் சிலேட்: எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும்போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்! – ஓஷோ #oshofacts #ஓஷோ

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் தேனீக்களைப் பாதுகாப்போம்!

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும். சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு, மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் மற்றும் அளி இனங்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான வண்டு இனங்களைக் கொண்டாட […]

இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!

நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர். ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று காட்டியவர். ட்ரெண்ட் மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தவர்களில் இவர் ஒரு சிறப்பான உதாரணம். வாரிசு அடையாளம்! திரையுலகில் வெற்றிகரமாக இருக்கிற ஆளுமைகளின் வாரிசுகள், அதே துறையில் கோலோச்சுவது கடினம். ஆனால், அவர்களுக்கான அறிமுகங்கள் மிக […]