சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல் பூத்து அச்சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்த திரிபுராந்தக மூர்த்தி என்பது தொன்மம். சிவன் முகத்தில் புன்னகையைக் கவனியுங்கள். கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் திரிபுரமெரித்த வரலாறு உள்ளது. இவர் கடைச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயரில் புலவராய் இருந்து தமிழ் […]

‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!

மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.

கார்ட்டூனிஸ்டாக விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில் பாலா மிக முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ. உங்களின் சிறுவயது பற்றி…? தமிழகம்தான் பூர்வீகம் என்றாலும் மூன்று தலைமுறைகளாக மும்பையில் வசித்த குடும்பம் என்னுடையது. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. நான் பிறந்து வளர்ந்தது மும்பைதான். இடையில் சில காலம் மட்டும் தாத்தா பாட்டியுடன் இங்கு கிராமத்தில் […]

அறிவியல் கலைஞன் டாவின்சி!

கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி. ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றிருந்த லியானர்டோ டாவின்சி, 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார் – காத்தரினா. டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக […]

பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும். – ஓவியர் கோபுலு

நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!

ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மகாபாரதம், ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்தியப் பாரம்பரியக் கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். பெண்களை […]