சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.
75 ஆண்டுகால தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை!
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தான் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. விசிக தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். விசிக பொதுச்செயலாளரான முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், விசிகவுக்கு நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கும் விதிகளின்படி, விடுதலைச் சிறுத்தைகள் […]
காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?
காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை!
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபைத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய முதலமைச்சர், “பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது. மின்னணு […]
தமிழகத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லை!
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலையை அடைந்துள்ளதாகவும் பீகார், […]
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என, விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் படிப்பறிவுத் துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது என்றும் அதில், ஒப்பீட்டளவில் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவது மகிழ்ச்சி […]