உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!
நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
மீண்டு வரும்போது மாறி விடுவீர்கள்!
இன்றைய நச்: தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்; என்ன நடந்தாலும் மீண்டு வரும்போது சக்தி நிறைந்தவர்களாக மாறிவிடுவதை உணர்வீர்கள்! மாளவிகா சித்தார்த்தா
மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்!
தாய் சிலேட்: சூழல் எப்படி இருந்தாலும், மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள்! – ஸ்டீபன் ஹாக்கிங்
ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!
நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம் ; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம் என்கிறார் பிரளயன்.
தமிழின் முதல் மேடை நாடகம்!
பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன. இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள். தெருக்கூத்து, வீதி நாடகங்களில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களைத் தேடிச் சென்று நாடகங்களை நிகழ்த்தினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகக் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. பின்னாளில் மேடை நாடகம் என்கிற வடிவத்துக்கும் அது பாதை அமைத்துக் கொடுத்தது. தமிழ்நாட்டில் மேடை நாடகத்துக்கான முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார். […]
உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!
உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக. *** தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். வாழ்க்கையின் அந்திமக் காலத்திலும், அதாவது தனது 81-வது வயது வரையிலும்கூட நாடகக் கலைக்கு அருந்தொண்டு […]