ரசமான காதல் அனுபவத்தைத் தமிழ் நாவலில் முதலில் தந்த லா.ச.ரா.!

வாசிப்பின் ருசி: லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம் வாசக மனத்தில் அனிச்சையாக நிறுவுவதிலுமே அவர் தன் படைப்புச் செயல்பாட்டை நிகழ்த்தினார் என்று தோன்றும். அபிதா அப்படி ஒரு குறு நாவல் தான். பயணமே அதன் இலக்கு. அதன் மொழிநடையே அது சொல்ல வருகிற செய்தி, அல்லது கொடுக்க […]

நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!

அருமை நிழல்: பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம். புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர். ராவணேஸ்வரன் போன்ற இவருடைய தனித்துவமான நாடகங்களில் கதாநாயகனாகப் பெயர் பெற்ற மனோகரின் துவக்க காலப் புகைப்படம் இது. நன்றி: பேசும் படம்

லட்சம் பிரதிகள் விற்றால் சிறந்த புத்தகமா?

ஒரு புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் அந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் ஆகி விடுமா? லட்சம் பிரதிகள் விற்ற அந்தப் புத்தகத்தை எழுதின எழுத்தாளர் முன்னணி எழுத்தாளர் ஆகி விடுவாரா? அந்த நண்பர் அசால்ட்டாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு இப்படித்தான் யோசித்தேன். அந்தப் புத்தகம் ஒரு இலட்சம் பிரதி விற்றது என்றால் அதைப் பற்றி எத்தனை பேர் பேசியிருக்கிறார்கள்? அதன் உள்ளடக்கம், சொல்ல வந்த விஷயத்தை எளிதில் புரியும்படி சொல்லுதல், அதற்கான உத்தி, எடுப்பு – தொடுப்பு […]

இருளை அகற்றுவது மட்டுமல்ல ஒளியின் வேலை!

வாசிப்பின் ருசி: நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும், தன்னைச் சுற்றித் தூய்மையான ஒளியை அவனால் பரப்ப முடியும்; அருவியினின்று எட்டி நிற்கும்போது திவலைகள் பட்டு சுகப்படுவதுபோல!                         – தி.ஜானகிராமன்

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!

நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர். வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர், அவற்றின் வழிபாட்டுக் கூறுகள் மற்றும் சடங்குகள் என முழுமையான தகவல்களாகத் தொகுத்துள்ளார். இந்த நூலில் சொல்லப்பட்ட கதைகள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்ட பகுதியில் நடந்தவை. நாட்டார் தெய்வங்கள் நம்மைப் போலவே இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள். தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வங்களாயினர். சிலர் […]

இன்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்!

“நடிகர், இயக்குநர், முதல்வர் என பன்முகங்களைக் காட்டிய என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சின்னவர் அவர்களுக்கு இந்த ஆண்டு (2017) நூற்றாண்டு விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உண்மைதான். என்னை பொறுத்தவரை அவர் மறையவில்லை. என் நினைவில், நெஞ்சத்தில் மட்டுமல்ல லட்சோப லட்சம் மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று பலரும் அவரைப் பற்றி பேசினாலும், அவருடன் அதிகமான படங்களில் நடித்த என்னைவிட அவரைப் பற்றி யார் […]