ஒளிப்பதிவுக் கலையை எளிதாகக் கற்றுதரும் நூல்!
நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் ஆம்ஸ்ட்ராங் விளக்குகிறார். இந்த விதிகள் மரத்தின் வேர்களைப் போன்றது. இந்த அடிப்படை விதிகளின் அறிவை நாம் உள் வாங்கிக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் திரைப்படங்கள் அழகாகவும், எளிமையாகவும் அமையும். – இயக்குனர் மிஷ்கின் […]
தொலைக்காட்சியை இப்படியும் பயன்படுத்த முடியம்!
நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போது தொலைக்காட்சி இங்கு அறிமுகமானதோ அதிலிருந்து துவங்கிப் படிப்படியான அதன் தாக்கம் பூதாகரமாக வளர்ந்திருக்கிறது. செல்போன்களில் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பவர்களும் செய்திகளைப் பார்ப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் தொலைக்காட்சி சீரியல்கள் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மாறிவரும் குடும்ப மதிப்பீடுகளையோ, செண்டிமெண்டான காட்சியமைப்புகளையோ அல்லது பரபரப்பானதாகக் கருதப்படும் செய்திகளையோ டி.ஆர்.பி ரேட்டிங்காக கட்டமைக்கக்க் கூடிய ஒன்றாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும் […]
விரக்தியால் ஏற்படும் விபரீத விளைவுகள்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நிபுணராக உள்ள டாக்டர் பாலாஜி, சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். தனது தாயாருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கருதிய அவரது மகன் விக்னேஷ் என்ற இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் பாலாஜி உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பதற்றமும், பீதியும் பொதுமக்கள் மத்தியில் இருந்து விலகாத நிலையில், தஞ்சை அருகே […]
வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!
’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’, ‘ஆனந்தப்பூங்காற்றே’, ‘அமர்க்களம்’, ‘நீ வருவாய் என’ என்று ‘ஏறுமுகம்’ கண்டார் அஜித். ஆனால், மேற்சொன்ன படங்களுக்கு நடுவே அவர் நடித்த பல படங்கள் சுமார் வெற்றிகளையும் சூப்பரான தோல்விகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் இன்றும் அவரது தீவிர […]
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நேரத்தின் மதிப்பை உணர்வோம்!
தாய் சிலேட்: நேரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களே வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்தவர்கள்! – சார்லஸ் டார்வின்