அரங்கம் அதிரும்படியாக நிகழ்ந்த ‘அனேகா’ அரங்கேற்றம்!

இந்த 108 கரணங்கள் பரதநாட்டியத்தின் சொற்களஞ்சியத்தின் கை அசைவுகள் கால் அசைவுகள் மற்றும் உடல் தோரணைகள் ஆகியவற்றின் கலவையாகும்.

அதிமுக – பாஜக கூட்டணி: ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன?

அதிமுகவும் பாஜகவும் மறுபடியும் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்று அண்மைக்காலமாக புகைந்து கொண்டிருந்த கேள்விக்கு ஒரு வழியாக டெல்லி சந்திப்புக்குப் பிறகு மங்கலான முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும். சந்திப்பு நிகழ்ந்த அன்று இரவே தனது சமூகவலைதளப் பக்கத்தில், கூட்டணியின் எதிர்காலம் குறித்து கணித்து, அமித்ஷா சொன்னமாதிரியே டெல்லியிலிருந்து கிளம்பி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய கையோடு எடப்பாடி பழனிசாமி பேசும் குரலே, சற்றே எடப்பாடியின் குரல்தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு டெல்லியின் குரலாக […]

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்

நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம் ******* * பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத – தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்ற துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ. வெ. ரா. மணியம்மையார்! * அவரின் வாழ்க்கைப் பயணம் பற்றியும் தன்னலமற்ற தொண்டறம் பற்றியும் விளக்கிச் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணப் படைப்பு தான் இந்த நூல்! * இந்த நூலை சிறப்பாக படைத்துள்ள ஆசிரியர் கி.வீரமணி […]

பிரகாஷ்ராஜ்: அசலான முழுமையான கலைஞன்!

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ். மேடையிலிருந்து திரைக்கு பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். நாடகப் பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்து நீங்காத் தடம் பதித்தவர்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். நாடகங்களில் கிடைத்த பிரபல்யத்தின் மூலமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கன்னடத் தொடர்களிலும் அதன் வழியே கன்னடத் […]

அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு: தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், திமுக கூட்டணி மொத்தமாக அள்ளியது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், இந்தக் கூட்டணி அப்படியே தொடரும் வாய்ப்புகளே அதிகம். நேர் மாறாக, எதிர்க்கட்சிகள், பல்வேறு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, துணைக்கு […]

ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!

மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில் ‘செயற்கை கருத்தரிப்பு’ நுட்பத்தைப் பற்றிப் பேசும் வகையில் குற்றம் 23, காதலிக்க நேரமில்லை, மிரியம் மா, யசோதா உள்ளிட்ட சில திரைப்படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகைமையில் அமைந்திருந்தன. அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கிறது தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள ‘ட்ராமா’ (Trauma). ஆங்கிலத்தில் […]