மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமம், நகரம் என எல்லாத் தெருக்களிலும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தி, அவர்களால் முடிந்த அளவு இனிப்புகளையும், அன்னதானம் வழங்கியும் எம்.ஜி.ஆர் மீதான […]

எம்.ஜி.ஆரின் கட்சியும் ஆட்சியும் மக்களுக்கானது!

தமிழ்த் திரையுலகில் ‘புரட்சி நடிகர்’ என்றும் ‘மக்கள் திலகம்’ என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அரசியலில் பிற்காலத்தில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். என்று அவரது கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பட்டார். தமிழக அரசியலில் தான் ஆரம்பித்த கட்சியை 18 ஆண்டுகளில் ஆட்சியில் அமரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா என்றால், அவரது வழியில் வந்த எம்.ஜி.ஆர் தான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சியை ஆறு ஆண்டுகளில் ஆட்சியில் அமரச் செய்தவர். தி.மு.க.வில் இருந்த காலத்தில் லட்சோப லட்சம் ரசிகர்களும், ஆயிரக்கணக்கான ரசிகர் […]

பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். “எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க…” ஆசிரியர் சொன்னதும் பல மாணவர்களும் கைதூக்க, தூக்காமல் உட்கார்ந்திருந்த மாணவன் குப்புசாமி. படிப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. வேதாரண்யம் அங்கிருந்து 14 கி.மீ. ஒன்பதாவது வகுப்புப் படிக்கக் காலையில் கிளம்பி அலுமினியச் சட்டியோடு போகும் போது உடம்பெல்லாம் களைத்துவிடும். பள்ளியில் உட்கார்ந்ததும் கண்ணைச் சுழற்றும். தூக்கம் […]

தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம் மட்டுமல்லாது, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணிகளும் ஒருபுறம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இது போன்ற முயற்சிகளை, அரசு, தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் தனி நபர்களும் பல்வேறு விதங்களில் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளியுமான திவ்யா கிருஷ்ணன்  […]

மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!

ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து தியேட்டரை வந்தடைவதென்பது இன்னொரு வகை. இவ்விரண்டுக்கும் நடுவே பல வகையில் திரைப்படங்கள் உருவானதை நாம் கண்டு வருகிறோம். மிகச்சில நேரங்களில், சில ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு படங்கள் வெளியாவதும் நிகழ்ந்திருக்கிறது. புதிதாகத் தயாரிக்கப்பட்டவையே பழைய படங்கள் […]

மெட்ராஸ்காரன் – கதை சொல்லல் ‘செறிவாக’ இருக்கிறதா?

சில திரைப்படங்களின் உள்ளடக்கம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும். ஆனால், அப்படங்கள் வெளியான காலகட்டத்தில் சில காரணங்களால் கவனிப்பைப் பெறத் தவறியிருக்கும். அப்படியொரு திரைப்படமாக நம் கண்களில் தெரிந்தது ‘ரங்கோலி’. இயக்குனர் வாலி மோகன்தாஸ் அதனை உருவாக்கியிருந்த விதம் பெருங்கொண்டாட்டத்தை விதைக்காவிட்டாலும், சராசரிக்கு அப்பாற்பட்டதாகவே தெரிந்தது. ‘அடுத்த படத்திலாவது இந்த இயக்குனர் நல்லதொரு கவனிப்பைப் பெற வேண்டுமே’ என்ற எண்ணத்தை விதைத்தது. அதே இயக்குனர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் திரைப்படமே ‘மெட்ராஸ்காரன்’. இஷ்க், பூதகாலம், வேலா, லிட்டில் ஹார்ட்ஸ் என்று […]