உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!

உங்கள் மதிற்சுவருக்கு அப்பால் இருக்கிற அழகுகளை உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்; அருகே சென்று அவ்வழகின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க எண்ணாதீர்கள்; அது வானவில்லை கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த சூரியகாந்தி வயலில் கோடைப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த செம்பருத்தியின் நிழலில் சருகுகள் கொட்டிக் கிடக்கலாம்; நீங்கள் தூரத்திலுருந்து மகிழ்ந்த நதிக்கரையில் ஓர் இடுகாடு இருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து ரசித்த மரத்தின் கிளையில் ஓர் எலும்புக்கூடு தொங்கலாம்; தூரத்துப் […]

உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே!

உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!

அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியச் சொன்ன ஆசான்!

கவிதை: நீ மட்டும் தான்… தத்துவ ஆசான்கள் அனைவரும் உலகம் எப்படி‌ இயங்குகின்றது என பொழிப்புரை எழுதிக் கொண்டு இருந்தபோது நீ மட்டும்தான் அதை எப்படி மாற்றுவது என விளக்கவுரை எழுதினாய். ஆன்மீகவாதிகள் அனைவரும் ஆத்மாவை கடைத் தேற்றும் வழியை உபதேசித்துக் கொண்டிருக்க, நீ மட்டும் தான் கடையனைக் கடைத்தேற்றப் பாதை செய்தாய். மதவாதிகள் அனைவரும் சொர்க்கத்திற்கான திறவுகோலை ஏலம் விட்டுக்கொண்டு இருக்க, நீ மட்டும்தான் பூமியை எப்படி சொர்க்கமாக்குவது என வரைபடம் வரைந்து காட்டினாய். அறிவு […]

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!

கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.

எங்கிருக்கிறது உன் அழகு?

அழகிப் போட்டி எதிலும் கலந்துகொண்டு எந்தப் பட்டமும் பெறாதவள் நீ. ஆனாலும் உலக அழகிகளை விட உன்னத அழகியென்று உன்னைத்தான் கூறுவேன்.

சுமை…!

யாருக்கு இல்லை? புல்லின் நுனிக்குப் பனித்துளி நத்தைக்கு அதனைக் கீழிழுக்கும் பழம் பிச்சைக்காரப் பெண்மணிக்குக் கழுத்தில் தொங்கும் தூளி பள்ளிச் சிறுவனுக்குப் பயன்படாத சிந்தனைகளடங்கிய புத்தப்பொதி மலேசிய மாமாவுக்கு மூச்சுத் திணறவைக்கும் தொந்தி வேலை கிடைக்காத அக்காவுக்கு மீதமிருக்கும் நாட்கள் உன்னிப்பாகப் பார்த்தால் உயிர் கூடத்தான்! – லட்சுமி குமாரன்